Quantcast
Channel: வில்லனின் விநோதங்கள்
Viewing all articles
Browse latest Browse all 28

போஸ்ட் மார்டனிசமும் பொத்தல் பனியனும்

0
0
முன் குறிப்பு :

இக்கதையில் வருபவை யாவும் கற்பனையே, யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல.

முன் குறிப்பின் விளக்கம் :

நான் இதை என டிக்ளேர் செய்துவிட்டதால் இதை நீங்கள் கதையென்றே எண்ணவேண்டும். இதெல்லாம் கதையா என்ற ஆராய்சியில் இறங்க கூடாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இழையை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் முன், ஈழப்பிரச்சனை விவாதங்கள், காஷ்மீர் விவாதங்கள், ஆணா-பெண்ணா போன்ற விவாதங்கள், பெண்ணிய கூக்குரல்கள், ஆணாதிக்க பிளிறள்கள், அஜித்-விஜய் கிண்டல்கள் கேலிகள், பிறந்தநாள் வாழ்த்து இழைகள், கணிணி சம்பந்தப்பட்ட இழைகள், சிந்தனை இழைகள், ஆன்மீக இழைகள், பகுத்தறிவு வாதங்கள், காழ்புணர்ச்சியிலான வசவுகள், செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று எதும் ஒன்று படித்துக்கொண்டிருந்திருக்கலாம்

சிலர் தனிநபர் உரையாடலில் உரையாடிக்கொண்டிருக்கலாம், சிலர் தனி மடல்களில் யாரையாவது திட்டிக்கொண்டிருக்கலாம். சிலர் தங்களின் படைப்பிற்கு வந்த பாராட்டுக்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கலாம், இன்னும் தமது படைப்புக்கு பாராட்டு வருகிறதா என்று காத்துக்கொண்டிருக்கலாம்,

என்னை மதிக்கவில்லை என்று குழுமத்தை விட்டு சிலர் அன்சஸ்கிரைப் செய்து கொண்டிருக்கலாம், மாடரேட்டர்களாக இருந்தால் யாரையாவது மட்டுறுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம், 

மூன்றாம் நபரை பற்றி இரண்டு பேர் உரையாடிக்கொண்டிருக்கலாம், புது ஐடியில் இருந்து வருபவர்கள் யாரென்ற ஆராய்சியில் ஈடுபட்டிருக்கலாம், பெண் ஐடியில் வருபவர்களை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க உண்ணாமலையாளிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கலாம், 

சிலர் வலைப்பூக்களை பார்வையிட்டு கொண்டிருக்கலாம். வலைப்பூவிற்கு பின்னூட்டமிட்டு கொண்டிருக்கலாம். ஹா ஹா ஹா, ஸ்மைலி, அதே அதே, எல்லாருக்கும் காலை/மாலை/இரவு/நண்பகல் வணக்கத்தை செலுத்தி கொண்டிருக்கலாம். தப்பும் தவறுமாக தமிழில் தட்டச்சி பிழைகளுடன் பின்னூட்டம் இட்டுக்கொண்டிருக்கலாம்.


இன்றும் எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது. எப்படியாவது காலை 5 மணிக்கு எழுந்து கொண்டு உடற்பயிற்சி நிலையம் ( ஜிம்) சென்று உடலை கட்டுகோப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாகாமலே இருந்தது. ஆரோக்கியத்திற்கு ஜாக்கிங் போனா போதாதா என்று நண்பர்கள் கேட்டுகொண்டிருக்கிறார்கள்.

பேருந்து பயணத்தின் போது மேற்கூரை கம்பியை பிடிக்கும் பொழுதும், இருசக்கர வாகனத்தை ப்யூரி ஹாண்டில் போட்டு ஸ்டைலாக ஓட்டி புஜத்தை முறுக்கி காட்டி பெண்களை கவர இதுதான் வழி என்பதை சொல்லிக்கொண்டிருக்க விருப்பமில்லை.

தினமும் இரவு நித்திரா தேவி பல ஆண்களுடனும், பெண்களுடனும் சல்லாபித்து என்னை தழுவ நேரம் தவறியே வந்து கொண்டிருக்கிறாள். இதனாலேயே அதிகாலை விழிப்பு சாத்தியப்படாமலே போனது. சிலர் கூந்தல் கருப்பு, குங்கமம் சிகப்பு என்ற அதியபங்கர உணமையான சீக்க்கிரம் தூங்கிடனும் என்பது போன்ற யாருக்கும் தெரியாத ரகசியங்களை எல்லாம் சொல்வார்கள்.

அறைத்தோழன் பதினோரு மணிவாக்கில் வந்ததும் சாப்பிட்டுவிட்டு குட் நைட் சொல்லிவிட்டு தூங்கிவிடுகிறான். கேட்டால் புண்ணியம் செய்திருக்கனும் என்பான், நான் செய்த பாவம் என்னவோ. தினமும் மாலையில் இரண்டு கிமீ நடக்க வேண்டுமாம்,

நாலு கிமி நடக்கிறேன், காலணி விரல்களை அறுத்ததுதான் மிச்சம். இந்த எரிச்சல்களினாலேயே பல நாட்கள் தூக்கம் வராமல் போனதுண்டு. இதற்கும் குக்குமம் சிகப்பு கண்டுபிடிப்பாளர்கள், வாங்கும் போதே சரியான சைஸில் வாங்க வேண்டும் என்கிறார்கள்,

வாங்கித்தொலைச்சாச்சி, 1200ரூ போயிடுச்சி, நான் வாங்கும் சம்பளம் புதியதாக ஒன்றை வாங்க ஒத்துழைப்பது இல்லை.

நீதான் 8 மணிக்கே உன் அறைக்கு சாப்பிட்டு போயிடுறியே, அப்புறம் என்னனு கேட்கிறார்கள், டிவியை பார்காதே என்றார்கள், வரவில்லை, பார் என்றார்கள், ரிமோட் பட்டன் தேய்ந்ததும், விரலும், கண்களும் எரிச்சலைந்ததுதான் மிச்சம். இரவில் மெல்லிசைகளை கேட்டு வர சொன்னார்கள். என்னிடம் இருக்கு எப் எம் ப்ளேயரில் பேசியே சாகடிக்கும் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகளை நினைத்தே மெல்லிசை மேல் மெல்லெறிச்சல்களை தந்து கொண்டிருந்தது.

நீ ஏன் ஒரு ஒரு ஐ பாட் வாங்க கூடாது என்கிறார்கள் சிலர். ஐக்கு பதில் யூ போட்டு திட்டவேண்டும் போல இருந்தது. பெரிய விசய்ங்களானாலும், சின்ன விசயங்களானாலும் அவர்கள் வசதிக்கேதான் ஐடியா கொடுக்கிறார்கள்.

புத்தகம் படி என்றார்கள், படிக்க ஆரம்பித்தேன், பிடித்து தொலைந்தது புத்தகங்கள், தூக்கம் வந்தாலும், ஓடிப்போய் முகத்தை அலம்பி தூக்கத்தை கழுவி, முடிவு வரை படிக்கலானேன். எதோ சொல்ல வந்து ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்,

இன்றும் எழுந்திருக்க முடியவில்லை என்று ஒற்றை வரியில் முடித்து இருக்கலாம்.

நேற்று புத்தக கண்காட்சியில் கூட்டம் கொஞ்சம் குறைவு. வார இறுதிகளை விட வார நாட்களில் கூட்டம் எப்பொழுதும் குறைவுதான்.

வந்திருந்த கூட்டமும் எலுமிச்சை ப்ளேவர் டீக்கு முட்டிகொண்டிருந்தது. யாரோ லெமன் டீ சென்னைல இங்க மட்டும்தான் விற்கிறதா புரளியை கிளப்பி இருப்பாங்களோ என்று லாலா என்னிடம் சொன்னான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது எனது நண்பன் ஆர்யாவின் தம்பியின் நோட்டில் இருந்து உபயோகப்படுத்தப்படாத காகிதங்களில் சூர்யா கிறுக்கி கொண்டிருந்த 787 பக்கம் கொண்ட நாவல். 787பக்க நாவில் 211 பக்கத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கிறேன். முதல் 210பக்கங்களை படிக்க விரும்புவர்கள், அந்தரங்க லீலைகள் புத்தகத்தை படிக்க வேண்டுகிறேன். அவற்றுக்கு அந்த 210க்கும் வித்தியாசங்கள் அதிகம் இல்லை.
அதை படிக்காததால் கதை புரியாமல் போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம்,

இப்படிக்கு

லாலா
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது புத்தகம் இருக்கும் ஸ்டாலை நோக்கி சென்று கொண்டிருந்தேன், நான் கொடுத்த 20 புத்தகங்களில் 19 புத்தகம் மட்டுமே எஞ்சியிருந்தது. நண்பர் ஒருவரிடம் காசை கொடுத்து என் சார்பாக ஒன்று வாங்கி படிக்க சொன்னேன். அவனுக்கு அது நான் எழுதியது என்று தெரிந்திருக்வில்லை. இது என்னடா முப்பதாம் நூற்றாண்டு முனுசாமி என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தான், என் புனைப்பெயர் அவனுக்கு அறிமுகபடுத்த விரும்பவில்லை. மேலோட்டமாக படித்தவன் இந்த புத்தகத்திற்கு 85ரூ அதிகம் என்றான், 

பெங்களூரு பேருந்து நிலையங்களில் 20ரூ கலர் கலரான அட்டைப்படத்துடன் புத்தகம் கிடைக்கும் என்றான். 

மீண்டும் புத்தக கண்காட்சியில் நுழைந்தோம், கூட்டத்தில் அவனை தொலைத்துவிட்டு மெதுவாக வெளியேறி அவன் மீண்டும் தொடர்பு கொள்ளாதிருக்கும் வண்ணம் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் பேட்டரியை கழற்றிவிட்டு மீண்டும் பொருத்தி அதை இயக்காமல் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நுழைவு வாசலுக்கு நான் கொண்டு சென்றிருந்த எனது நண்பணின் வாகனமான ஸ்பெலெண்டர் ப்ளைசை எடுத்துக்கொண்டு நீண்ண்ண்ண்ண்ட்ட்ட்ட்ட்ட்ட்டடடடட அந்த நுழைவாயில் வழியை கடந்து வெளியேறினேன்.

கையில் வெறும் 50ரூபாய் மட்டுமெ இருந்தது, நம்ம ஊர் என்றால் கள் கிடைக்கலாம், கொஞ்சம் ஒதுக்குபுறமென்றால் பட்டையும் கிடைக்கும், இந்த சென்னையில் எல்லாமே புட்டியில் அடைப்பட்டதுதான். எல்லாம் அரசு சரக்கு, குறந்தபட்சமே 60ரூ என்று இருக்கும்.

நண்பனின் மேல் கோபம் கோபமாக வந்து தொலைத்தது. ஏன் மக்கள் யாருக்கும் இலக்கியறிவே இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் போஸ்ட் மார்டனிசம் பற்றியே தெரிந்து கொள்ளாமல் எபோதும் பெண்களை பற்றி பேசுகிறார்கள், இல்லையேல் பெண்ணியம் பேசுகிறார்கள், போஸ்ட்மார்டனிசம் பற்றிய எனது பதிவை படிக்காத இந்த தற்குறி மக்களுக்கு எப்படி நான் பிரிந்தரின் டூயிங் டையிங் சிந்தாந்தத்தை விளக்க போகிறேன், அன்று ரவி போஸ்ட் மார்டனிசம் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருக்கையிலே பிரிந்தரின் சித்தாந்ததை சொன்னதும் சிலாகித்து எனக்கு ஹோட்டல் கம்போர்ட்டில் நான் தள்ளாடும் அளவுக்கு ஊற்றிக்கொடுத்தான். இல்லை வாங்கி கொடுத்தான், இல்லை நான் குடித்ததற்கு காசு கொடுத்து சென்றான்.

அடுத்த போஸ்ட் மார்டனிச கதைக்கான கருவை தேடி மெரினாவில் தேடி அழைந்ததில் நேரம் பத்தை தாண்டி பத்தரைக்கு பாதியில் நின்றுகொண்டிருந்தது. அந்த மஞ்சள் சல்வாரை இதற்கு முன் எங்கயோ பார்த்திருக்கிறேனே என்ற எண்ணம் பீடாகடையில் மாவா (மாவா என்பது சென்னையில் ரூ3 முதல் 10ரூ வரை விற்கும் ஒரு லகரி வஸ்து, ஒரு நாள் வேலை மெனக்கெட்டு அதில் என்ன சேர்க்கிறார்கள் என்று நோட்டமிட்டிருக்கிறேன், சீவலையும், சுண்ணாம்பையும், சில புகையிலைகளையும் ஒரு கவரில் போட்டு தேய் தேய் தேய்த்து தூளாக்கி கொண்டிருந்தார்கள்,) வாங்கி வாயில் ஒரு ஓரத்தில் அடக்கிகொண்டு செல்லும் வரை நினைவிலேயே இந்தாள் அந்த பெண்.

அந்த இடமே செம்மண் பிரதேசமாக இருந்தது, 120 பீடா, 420 பீடா முதல் 920 பீடாவரை போடப்பட்டு துப்பப்படும் இடமாக அது விளங்கியது - விளங்கினாப்லத்தான் - பீடா கடையில் இருந்த சேட்டிடம் ( நம்மவர்களுக்கு இந்தி பேசினாலே சேட்டுத்தான் ) அபின், கஞ்சாபற்றி நேரிடையாக கேட்காமல் கொன்ஞ்சம் சுத்தி வளைச்சி கேட்டுக்கொண்டிருந்தேன், அவனிடம் இருக்காது என்று புரிந்து போனது. கொஞ்ச்ம் கிடைச்சா தேவலை. இன்னிக்காச்சும் கிடைக்குமா?


நீண்ட பதிவுகளை யாரும் அதிக முக்கியத்துவம் தந்து படிப்பதில்லை என்பதால் இங்கே தொடரும் போட்டுவிடுமாறு 30 நூற்றாண்டின் முனுசாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இங்கே ஒரு தொடரும்.

-----------------------------------------------------------------------


இன்றும் எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது. எப்படியாவது காலை 5 மணிக்கு எழுந்து கொண்டு உடற்பயிற்சி நிலையம் ( ஜிம்) சென்று
உடலை கட்டுகோப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாகாமலே இருந்தது. ஆரோக்கியத்திற்கு ஜாக்கிங் போனா போதாதா என்று நண்பர்கள் கேட்டுகொண்டிருக்கிறார்கள்.

பேருந்து பயணத்தின் போது மேற்கூரை கம்பியை பிடிக்கும் பொழுதும், இருசக்கர வாகனத்தை ப்யூரி ஹாண்டில் போட்டு ஸ்டைலாக ஓட்டி புஜத்தை முறுக்கி காட்டி பெண்களை கவர இதுதான் வழி என்பதை சொல்லிக்கொண்டிருக்க விருப்பமில்லை

டிட்டோ டிட்டோடிட்டோ டிட்டோடிட்டோ டிட்டோடிட்டோ டிட்டோ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படி சென்ன்ற அத்தியாயத்தையே தொடர்ந்து எழுதியிருந்தான் ஆர்யா, தினசரி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே அவன் அத்தியாயம் தோறும் இப்படியே எழுதி கொண்டிருக்கிறான்.
இனி அத்தியாயம் ஆரம்பங்களில் வெறும் டிட்டோ மட்டும் போட்டு ஆரம்பித்து விடுகிறேன், உங்களின் வசதிக்காக

இப்படிக்கு

லாலா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றும் எழுந்திருக்க முடியவில்லை.....

நேற்று இரவு பிரிந்தரின் டுயிங் & டையிங் 27.5 தடவையாக படிக்க ஆரம்பித்து இருந்தேன், பிரிந்தரின் செய்யப்படாத செயல்களின் செயல்பாடுகளை ஆராய்ந்திருந்த அந்த 331ம் பகத்தை படிக்கும் போதே தூங்கியிருக்கிறேன்.

அநேகமாக அது இரவு 2 மணியாக்க இருந்திருக்கலாம்.

டைமிங் &; ரைமிங் பிரிந்தரின் 2553 பக்கம் கொண்ட அடுத்த படைப்பை அடுத்த முறை எப்படியாவது வாங்கிவிட வேண்டும், புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை, இவர்களுக்கு போஸ்ட்மார்டனிசமும் புரியவில்லை, ப்ரிந்தரையும் தெரியவில்லை. இவர்கள் இன்னும் .லா.ச., அ.மி, இ.பா. சு.ரா, சா.நி. ஜெ,மோ, சு.தா இவர்களையே கட்டிக்கொண்டு அழுகிறார்கள். 104 பக்கம் கொண்டிருந்தாலே நாவல் என்கிறார்கள்.

ஒரு நாவலின் நீளம் 2 கி.மீ இருக்க வேண்டும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதை ஆர்யா எனும் 30ம் நூற்றாண்டின் முனுசாமி எழுதிய போது கஞ்சா, அபின் என்று போதையில் இருந்திருக்கலாம் என்பதை அவன் நீளத்தை அளந்திருந்த அலகிலேயே தெரிகிறது

இப்படிக்கு

லாலா
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முந்தைய வருடம் என்னுடைய 400 பக்கம் கொண்ட நாவலை வெளியிட்டதில். எனது கைகாசு செலவு போக நாவலின் மூலம் வருமானமாக 15,426 கிடைத்தது. இதில் 26ரூ அன்றைய தினமே நான் அருந்திய காபிக்கும் வடைக்கும் சரியாகி போனது. (காபி 11ரூ, வடை 10ரூ, டிப்ஸ் 5ரூ )

மெகாமார்ட்டில் 3 துணிகளுக்கு நான்கு துணிகள் இலவசம் கண்ணில் பட்டுத்தொலைந்தது. வெளியே வருகையிலே 10000ரூ மட்டுமே மிஞ்சியது (4 ஜீன்ஸ் மற்றும் மூன்று முண்டா பனியன் டைப் டீ சர்ட் வாங்யிருந்தேன்.)

இன்று நான் அணிந்திருக்கும் இந்த சாயம் போன நீல நிற ஜீன்ஸ் போன வருடம் வாங்கியதுதான். புத்தகங்கள் விற்றால் ஒரு 10000 கிடைத்தால் கூட போதும்.

போனதடவை பத்தாயிரத்தை எங்கேயோ தொலைத்து விட்டேன். சூப்பு கடைக்கு சென்றிருந்த்தேன் அது வரை நியாபகம் இருக்கிறது. பிறகு எப்பொழுது சூப்புகடையில் இருந்து கிளம்பினேன் என்பது நியாபகம் வரவில்லை. ஏதோ சிகப்பாய் திட்டு திட்டாய் ஆடையில் ஒட்டிக்கொண்டிருந்தது, முகர்ந்து பார்த்த போது மேன்சனில் மல, ஜலம் கழிக்கும் அறையின் வீச்சத்தைவிட குமட்டலை அதிகம் கொடுக்கும் வீச்சம் பிராண்டியது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆர்யா என்கிற 30ம் நூற்றாண்டின் முனுசாமி அவன் வழக்கமாக செல்லும் 3-ஸ்டார் பாரைதான் சூப்புகடை என்கிறான். (இதில் வழக்கமாக என்பது எப்பொழுதெல்லாம் கையிருப்பு ஐந்து இலக்கங்களில் கைவ்சம் இருக்கிறதோ, அந்த மாதியான வழக்கங்களில் என்பதி புரிந்து கொள்ள வேண்டும், சாதாரண நாட்களில் அவனிடம் இருக்கும் 40ரூ-50ரூகளுக்கு அந்த பொன்னிற திரவத்தை கண்ணில் கூட காட்டமாட்டார்கள்,

இப்படிக்கு

லாலா
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எப்பொழுது அறைக்கு திரும்பினேன் என்பது கடைசிவரை நினைவுக்கு வரவில்லை. ஆனால் சாவி போட்டு கதைவை திறந்து மீண்டும் அதை பூட்டி பேன் போடப்பட்டு எனது ஜீன்சை கழட்டிவிட்டு எனது ஷார்ட்சை போட்டுக்கொண்டும் சர்டை கழட்டிவிட்டு ஒரு பொத்தல் விழுந்த பனியனை போட்டுக்கொண்டு எப்படி என்னால் சரியாக இயங்க முடிந்தது என்பதை நினைக்கையில் வியப்பாக இருந்தது.

அநேகமாக மனித மூளையில் சில தினசரி நடவடிக்கைகள் கணிணி ப்ரோகிராம்கள் போல பதிவு செய்யப்பட்டு விடுகிறது. பிரிந்தர் டைமிங் &; ரைமிங் புத்தகத்தில் மூளைப்பற்றி விவரித்திருக்கிறாராம்.
புத்தகம் இந்த சூழலில் கிடைத்தால் கூட வாங்குவதற்கு போதிய பணம் கிடைக்கும என்பது ச்ந்தேகம்தான், புத்தக கண்காட்சியில், புத்தக நிலையங்களில் இருந்தால் அந்த பகுதியை மட்டும் தேடி மனதில் உருப்போட்டுக்கொள்ள வேண்டும்.

இன்றும் எழுந்து கொள்ள நேரமாகியிருந்ததால், இன்றும் ஜிம் போக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற வில்லை. இன்று திங்கள் கிழமை என்பதால்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கதையை(!?) ஆர்யா எழுதின போது திங்கள், நான் எழுதியது ஏதோ ஒரு வருடத்தின் ஏதோ ஒரு நாள்

இப்படிக்கு

லாலா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அலுவலகம் சென்று மாலை 8 மணியளவில் வீடு திரும்பியிருந்தேன். இரண்டு நாட்களாக கஞ்சா வேண்டும் போல இருந்தது. மீண்டும் சேட் கடை, எப்படியெல்லாமோ கொக்கி போட்டும் இல்லையென்றுவிட்டான். இந்த முறை மாவா அவன் கைவசம் இல்லை. இரண்டு 420பீடா ஸ்ட்ராங்காக போட சொல்லி விட்டு சாலைகளை கவனித்துக்கொண்டிருந்தேன்.

சில வெளிநாட்டு பயணிகள் இந்த அடைசலான தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தனர், இவர்களிடம் கிடைக்கும் என்று உள் மனது சொல்லியது.

சேட்டு மடித்து தந்த 420 பீடாவை ( ஒரு முழு வெத்தலையில் சுண்ணாம்பும், பானையும் தடவி அது லேசாக காய்ந்ததும் ஜர்தா மற்றும் சீவல் அல்லது கட்டி பாக்கு போட்டு கூடவே கைனி எனப்படும் ஒரு வகை புகையிலையையும் போட்டு கொடுப்பார்கள், முழு பீடா 7ரூ, போனவரும் வெறும் 3.50ரூ காசாகத்தான் இருந்தது)

அந்த வெள்ளைக்காரர்களில் பின்னாள் வந்த இளைஞனை பார்த்து மெல்லிய புன்னகைத்தேன். அவனுக்கு முன் சென்ற ஒரு வெள்ளைக்கார பெண் ( அவள் தங்கையா, அக்காவா, ஆண்டியா, குழந்தையா, காதலியானு தெரிஞ்சிக்க முடியலை) அவளை பார்த்துதான் புன்னகைக்க போனேன், வாயில் குதப்பிய பீடா, எச்சிலை பொங்கவிட்டதால் காரி உமிழ்ந்துவிட்டு திரும்பி புன்னகைகயில் அவன் இருந்தான் எனது பார்வைக்கு நேராக,

அவனிடம் மெதுவாக சென்று பேச்சுக்கொடுத்தேன், சாந்தமாகவே சிரிச்சி மழுப்பிக்கொண்டிருந்தான்,
அநேகமாக நான் எதோ அதிகாரி என்று நினைத்திருப்பான் போல. அவனது கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றுவிட்டான். இன்றும் கிடைகவில்லை, சொசைட்டி மேல் கோபம் கோபமாக வந்தது.

30ம் நூற்றாண்டு முனுசாமி கேட்டுக்கொண்டதர்கு இணங்க மீண்டும் தொடரும்ம்

--------------------------------------------------------------------------------


டிட்டோ டிட்டோடிட்டோ டிட்டோடிட்டோ டிட்டோடிட்டோ டிட்டோ

இன்றும் எழுந்திருக்க முடியவில்லை.....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று இரவு படித்துக்கொண்டிருக்கும் போது அப்படியே தூங்கியிருகிறேன். படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் அட்டை உடைந்து விட்டது - ஹார்ட் பவுண்ட் அட்டை ஏன் போடுறாய்ங்களோ - வாயில் ஒரு மாதிரி சவ சவ என்று எச்சில் ஊறிக்கொண்டிருந்தது, ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய்கொப்பளித்துக்கொண்டேன். இரவு உதட்டை பிதுக்கி, ஈறுகளில் ஒளித்துக்கொண்ட ஹான்ஸ் - ஹான்ஸ் என்பது கைனி எனப்படும் ஒரு வகை வஸ்துவை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், கணேஷ் என்ற பெயரிலும் வருகிறது- உறக்கத்தில் எடுத்துப்போடாமலே படுத்துருக்கிறேன்.

கைகளில் பைசா தேறாத போது 4ரூ விற்கும் ஹான்ஸ் மற்றும் கணேஷ் உதவியில்தான் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் ஈறுகளில் புண்ணை ஏற்படுத்தி விடுகிறது கைனி வகைகள், வாய் துர்நாற்றத்திற்கு அதுவும் ஒரு காரணமாக அமையலாம், எந்த ஒரு ஆணின் முகத்தினருகேவும் எனது முகத்தை கொண்டு போவதை விரும்புவதில்லை, எந்த பெண்ணும் என்னிடம் இதழ் ஸ்பரிசங்களை பெற காத்திருப்பதும் இல்லை, அதனால் வாய்துர்நாற்றத்தை நான் சட்டை செய்வதும் இல்லை.

ஒரு முறை பெங்களூரில் இருந்த போது வாயில் பான் ப்ராக்கோ அல்லது மானிக் சந்தோ வாயில் குதப்பிக்கொண்டு வங்கியிற்கு செல்ல நேர்ந்தது, அங்கே பணம் செலுத்தும் கவுன்டரில் ஒரு பெண்மணிதான் இருந்தார், துவாரத்தின் வழியாக பணத்தையும், வங்கி சலானையும் கொடுத்துவிட்டு காத்திருந்தேன், அந்த அம்மையார் எதோ விளக்கம் - தட்டச்சி செய்யும் சமையங்களில் ஏதோ என வரமாட்டேன் எங்கிறது - கேட்கையிலே துவாரத்தின் வழியாக நான் பதிலளிக்கையில் அந்த அம்மையார் சிறிது நேரம் நிலைகுலைந்து போனார். அவர் பேசிய அந்த வேகமான ஹிந்தி எனக்கு பிடிந்த்திருந்தது, ஆனால் புரியவில்லை.

அலுவலகங்களில் பான், பீடா போட முடியாது. அதன் நறுமணம் கமழும் வாசனை எம்.டி அறை வரை வீசும். ஒரு முறை பான் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்கு நுழைந்துவிட்டேன். பாக்கை துப்பிவிட்டுத்தான் நுழைந்தேன் என்றாலும் அதன் வீச்சம் குறையாமலெ இருந்தது, கணிணியில் ஸ்கையில் கடலை போட ஆரம்பித்தால் மதிய உணவிற்கான செல்போன் அலாரம் அடிக்கும் வரை தலையை உயர்த்தாத பாபு கூட தலையை உயர்த்தி பார்க்கலானான்.

நிலமை சகஜ நிலை எட்ட சிறிது நேரம் பிடித்திருந்தது. அன்று முதல் அலுவலகங்களில் கைனி மட்டுமே தான் உபயோகிக்கிறேன். கைனி அதிகம் உபயோகித்தல் உடல் நலத்திற்கு தீங்கு என்று கூறினார் பக்கத்து சீட்டு பார்த்தசாரதி கையில் தினமும் கொண்டு வரும் ப்ளாஸ்கில் இருந்து காப்பியை குடித்துக்கொண்டே. நான் காப்பி உடல் நலத்திற்கு கேடு என்பதால் அதை குடிப்பதில்லை.

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு பழக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

என்னுடைய நண்பர் சீனுவிற்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை, ஆனால் வாரமிருமுறை கோப்பை நிறைய பொன் திரவம் வேண்டும். மகேஷ்க்கு மதுவாடையே ஆகாது, ஆனால் காலை கடனில் ஆரம்பிக்கும் சிகரெட் இரவு தூங்க செல்லும் போது இரண்டு பாக்கெட்கள் முடிந்து இருக்கும். சில சமயங்களில் 3.

அப்பா அந்த காலத்து மனுசர், அப்பாவிற்கு காப்பி &; மூக்கு பொடி இரண்டு மட்டும் இருந்தால் போதும், உயிர்வாழ தேவையான காரணிகள் யாவை என்று அவரிடம் கேள்வி கேட்டால் முதலில் இவை இரண்டைதான் தேர்வு செய்வார். எப்பொழுதும் அவரது கையில் பழுப்பா, கறுப்பா என சந்தேகம் தர தக்க ஒரு துண்டிருக்கும், அதன் போன ஜென்மத்து நிறம் வெள்ளை.

மாதமிருமுறை ஊருக்கு செல்வதை குறைத்து, இரண்டு மாதமொறுமுறையாக்கி கொண்டேன், எதிர்த்த வீட்டு கண்மணிக்கு திருமணம் நடந்துவிட்டதுதான் காரணம் என்று நண்பர்கள் கேலி செய்வார்கள். நிஜ காரணம் வீட்டு பாத்ரூமில் சிகரெட் உபயோக்கிக்க முடியாது, டிவியில் கிரிக்கெட் மேட்ச் அல்லது வசந்த் தொலைக்காட்சியில் சனி இரவு படம் கையில் கோப்பையுடன் பார்க்க முடியாது. சொந்த ஊரில் டாஸ்மாக் அவ்வளவு சுகாதாரமாய் இருக்காது, இருப்பவைகளில் கண்டிப்பாக வீட்டிற்கு தெரிந்த முகம் குறைந்தபட்சம் ஒன்றேனும் இருக்க கூடும். அதையும் மீறி பார், பப்புகளில் அவர்கள் தரும் 30 மில்லி சரக்கை 70-80 என்று கொடுக்க மனதுவராது, 180 மில்லியே டாஸ்மாகில் 70ரூபாய்தான்,

அதைவிட முக்கிய காரணம் வாடையடிக்காத திரவத்தை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை
( விக்கி இருக்கு என்கிறான். காசு கொஞ்சம் அதிகம் செலவாகும் என்கிறான்)

இது போன்ற காரணங்களுக்காகவே வீட்டிற்கு செல்வது பெருமளவு குறைந்து போனது. வீட்டில் இருக்கும் போது இரண்டு மூன்று கைனி பாக்கெட்டுகள் எப்பொழுதும் கைவசம் இருக்கும். அம்மா அன்று அதை கவனித்துவிட்டார், உலகத்திலே மிகப்பெரிய ஏமாளி அம்மாக்கள்தான். பல்வலி மருந்து என்பதை நான் சொன்னதை அப்படியே நம்பினார். ஒரு முறை நான் எனது சட்டை பையில் வைத்திருந்த கைனியை பல் வலி என்று அம்மா பல்லில் வைத்துக்கொண்டார்.

அம்மாவை பரிசோசித்த டாக்டர் ப்ரெசர் நார்மலாகத்தான் இருக்கிறது, பசி மயக்கமாக இருக்கலாம் என்று சொன்ன பின்னாடிதான் அப்பாவின் பதட்டம் தணிந்தது. அதன் பின் வீட்டில் கைனியும் உபயோகிப்பது இல்லை.

மாவா, 420 பீடா, பான், கைனி, சிகரெட், ரம், ப்ராந்தி, விஸ்கி என்று வளர்ந்த என் பழக்கம் நாளிடைவில் கோலியில் வந்து நின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணையங்களில் உளவு துறையினர் இருப்பதால் கோலி எங்கே கிடைக்கிறது என்று 30 நூற்றாண்டு முனுசாமி சொன்ன பதிவுகளை வடிகட்டிவிட்டேன் அவனது வேண்டுக்கோளுக்கிணங்க

இப்படிக்கு

லாலா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மற்றவற்றில் கிடைக்காத ஏதோ ஒரு ஆனந்தம் கோலியில் கிடைத்தது, கோலி உபயோகிக்கும் முறை என்று ஒன்று உள்ளது, அதை போட்டுவிட்டு உடனடியாக வாகனத்தை ஓட்டி செல்லுதல் கூடாது. பின்னால் அமர்ந்து செல்லுவதும் ஆபத்தானதுதான்.

எனக்கு ஆபத்தோடு விளையாடுவதுதான் பிடித்தமான ஒன்று

( இந்த முறை 30நூற்றாண்டு முனுசாமி கேட்கும் முன்னரே, தொடருமிட்டிருந்தான் இதை 30 நூற்றாண்டு முனுசாமியின் புத்தகத்தில் இருந்து ஒற்றி நாவலாக்கிய லாலா)

---------------------------------------------------------------------------------------------

இன்று டிட்டோ இல்லை, சீக்கிரம் எழுந்துவிட்டேன்

எழுந்துவிட்டேன் என்பதைவிட தூக்கம் வரவில்லை என்பதே சரியானதாக இருக்கும், சரியாக என்னை நித்திரா தழுவும் நள்ளிரவு ஒரு மணிவாக்கில் மின் விசிறி கரடியாக நுழைந்து அவளை விரட்டிவிட்டது.
சென்னை நகரில் உணவு இல்லாமல் உயிர்வாழ்வது சுலபம், காற்றில்லாமல் வாழ்வது கடினம்.
இரவு 1 முதல் 6 வரை நான்கைந்து முறை மின் துண்டிப்பு என்னை 6 மணிக்கு மேல் தூங்கவிடாமல் தடுத்துவிட்டது.

தேனீர் குடிக்க கிளம்பிவிட்டேன். இங்கே அதிகாலை 4 மணிக்கே பெரும்பாலான தேனீர் கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஒரு சேட்டு, மூன்று மலையாளிகள், இரண்டு தமிழர்கல் தேனீர் கடை உண்டு, சேட்டுக்கு புளியங்கொட்டை வியாபாரம் சைட் பிஸினசாக இருக்குமோ என்று நீண்ட நாள் சந்தேகம்,
அதனால் இரண்டு-மூன்று முறை அங்கே தேனீர் அருந்தியதோடு சரி, பிறகு அந்த பக்கம் தலைவைக்கவே இல்லை.

தமிழர்கள் கடையில் மரியாதை கிடைப்பது கடினம், டீ 2.50 இருந்த காலத்தில் இருந்து தற்சமயம் 6ரூ காலம் வரை அவ்வப்போது தமிழர்கள் தேனீர் கடையில் குடிப்பது வழக்கம், எல்லா கடைகளை விட இவர்களிடம் 5மி.லி குறைவாக இருக்கும் என்பது என் நீண்டகால ஆராய்சியின் முடிவு.

மலையாள சேட்டான்கள் கடைகளில் மலையாளியாகளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மரியாதை கிடைக்க கூடும். நிதினோடு போனா இன்னும் டீ நல்லா இருக்கும். ஆனால் தமிழர்கள் என்று குறைவான கவனிப்பு இருக்காது. தமிழர்கள் தேனீர் போட்டுட்டு வந்து எடுத்துக்க சொல்லுவாங்க, மலையாளிகள் கையிலயே வந்து கொடுத்துவிடுவார்கள்.

முக்கியமா கை தவறி உடையும் கண்ணாடி க்ளாஸ்(!?)க்கு பைசா கேட்கமாட்டார்கள், தமிழர்கள் கடையில் வசவுகளோடு பைசா வசூலும் உண்டு.

மலையாளிகள் கடைகளில் சிகரெட் விற்பனை கிடையாது, பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு ஒரு இழுவை, ஒரு உறிஞ்சல் என மாறி மாறி சுவைத்த பின்பு மிச்சமிருக்கும் சிகரெட்டை வீதியில் எறிந்துவிட்டு மீண்டும் அறைக்கு கிளம்பிவிட்டேன்.

தேனீரும் சிகரெட்டும் சிற்சில வேதியல் மாற்றங்களை உண்டுபண்ணி (பண்ணி தமிழ்) கொண்டிருந்தது. இரண்டு குளியறைகளும், நான்கு கழிவறைகளும் இருந்தது முதல் தளத்தில், முதல் தளத்தில் மொத்தம் 10 அறைகள், அறைக்கு தலா இருவர், இரண்டு அறைகளில் மட்டும் தலா மூவர். மொத்தம் 20 பேர். (நான் கொஞ்சம் கணக்கில் வீக், இருந்தாலும் இதுதான் சரியான விடையாக இருக்கும் என நம்புகிறேன்).

நான்கு அறைகளும் வெளியில் ஹௌஸ் புல் போர்டு போடாவிட்டாலும், நிரம்பி வளியும் சப்த்தங்கள் கேட்டுக்கொண்டேதான் இருந்தன. அஷ்ட கோணலான முகத்தோடு ஆறு பேர் காவலுக்கு இருந்தனர். இனி கண்டிப்பா சீக்கிரம் எழக்கூடாது என்று முடிவு கட்டிவிட்டேன்.

கொஞ்ச நேரம் குப்புற படுத்துக்கொண்டால் சமாளிக்கலாம் என்று சுகுமார் சொல்லியிருக்கிறான், அவன் சினி கூத்து, தேவி, வண்ணத்திரை வாசிக்கும் இலக்கியவாதி. பிரபுதேவா - நயன் திருமணம் என்று சினி கூத்து கவர் ஸ்டோரியை பார்த்து சிம்பு நயனை விவாகரத்து எப்போ பண்ணினான்னு நான் கேட்டதற்கு, நான் இந்த உலகத்தில் வாழத்தகுதியற்றவன் என வைதுவிட்டு மீண்டும் சினி கூத்தில் மூழ்கிவிட்டான்.

சுகு சொல்லித்தந்த பாடம் ஓரளவுக்கு செயல்பட தொடங்கியது.

குளியலறையில் ஒன்று காலியாகத்தான் இருந்தது. காறி காறி உமிழ்ந்து பல் துலக்கிய பின்பு சுகமான குளியல். குளியலறையில் போட்ட குட்டி தூக்கத்தை கலைத்தது அடுத்து குளிக்க தயாராக இருந்த நபரின் கூச்சல். வெளியே வந்ததும், முனகிகொண்டே உள்ளே சென்று தாழ் போட்டுக்கொண்டான்,

இன்று அலுவலகம் சீக்கிரமாக போக வேண்டும்.

சாப்பிடவில்லை. தயாரானதும் அலுவலகம் நோக்கி கிளம்பிவிட்டேன். 9 மணி அலுவலகத்தை 8.30ற்கே அடைந்திருந்தேன். அலுவலகத்தை திறக்க யாரும் வரவில்லை. காத்திருந்தேன். அலுவலகம் திறக்கும் அக்கவுண்ட்ஸ் முத்து மெதுவாக லிப்டை உபயோகிக்காமல் படியேறி வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கான காலை உடற்பயிற்சியாம். ஓடிச்சென்று மூக்கிலேயே குத்த வேண்டும் போலிருந்தது. அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது.

அவன் கதவை திறந்ததும் கையெழுத்துக்கூட போடவில்லை. ஆணியில் தொங்கி என்றும் தொங்கி கொண்டிருக்கும் சாவிகளை காணவில்லை. எனது கோபம் உச்சத்தை தொட்டுவிட்டது. நான் தேடியதை கண்டுக்கொண்ட முத்து சைகையால் சாவியிருக்கும் இடத்தை காட்டினான். பக்கவாட்டில் இருந்த சாவி அவசர தேடலில் கண்ணுக்கு புலனாகவே இல்லை.

எல்லாம் முடித்துக்கொண்டு கையெழுத்துப்போட ரெஜிஸ்டரை தேடிய போது அது மேலாளர் கையில் இருந்தது. காரணம் சொல்ல விரும்பவில்லை, இரண்டு மூன்று வசவுகளோடு இருக்கைக்கு திரும்பிவிட்டிருந்தேன்.

இன்று வெள்ளி. அலுவலகம் 5.30க்கு முடிவடைந்தது.

குமரன் வரச்சொல்லியிருந்தான், அவனிடம் இருந்து கிடைத்திருந்தது ஒரு குறுஞ்செய்தி,

காட் இட்.....

எஸ்.... கிடைத்துவிட்டதாம்... முதன் முறையாக பயன்படுத்த போகிறேன். ஏற்கனவே கோலி உபயோகித்திருக்கிறேன், ஆனால் கோலியில் நாம் எதிர்பார்க்கும் நிலையை எட்டமுடிவதில்லை. கோலி நாக்கில் பட்ட சில நிமிடங்களில் தாகம் அதிகரிக்கும், முதல் முறை போட்ட போது ஒன்றரை லிட்டர் பெப்சி புட்டியில் பிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதும் குடித்தும் தாகம் அடங்கவில்லை. குமட்டிக்கொண்டு வேறு தொல்லை கொடுக்கும்.

7-8 வருடங்கள் முன்பு உபயோகித்து இருக்கிறேன்.

வேலுச்சாமி மூட்டை தூக்கும் ஆசாமி, அவந்தான் சுருட்டி தருவான். நான் எப்படி இருக்கும் என்று அதை பார்த்தது இல்லை. இன்றுதான் பார்க்க போகிறேன். எங்கே வரனும்னு தெளிவா சொல்லியிருந்தான், சொன்ன நேரத்திற்கு முன்பாகவே சென்று விட்டேன், பதட்டமாகவே இருந்தது.
இரண்டு மூன்று காக்கி உடுப்புகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது, கொஞ்சம் கடுப்பாக்கியது. இன்னிக்கு கண்டிப்பாக கிடைக்கும் என உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது.

அருகில் இருந்த பெட்டிக்கடையில் சிசர் பில்டர் வாங்கி புகைக்க ஆரம்பித்திருந்தேன், கையில் வெறும் 60ரூபாய்தான் இருந்தது, குமரனுக்கு 50ரூ தர வேண்டும், 50ரூக்கு எவ்வளவு இருக்கும்? தெரியவில்லை.

காத்திருக்கலானேன்

----------------------------------------------------

இன்று டிட்டோ போட்டிருப்பானோ, அல்லது சீக்கிரம் எழுந்திருப்பானோ என்று வேகமாக அடுத்த பக்கத்தை திருப்பிய எனக்கு அது வெறும் வெற்றுதாள்களாகவே இருந்தது. 787 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில் சில பகுதிகளை மட்டுமே என்னால் இங்கே தர முடிந்திருக்கிறது. அதிலும் அன்று அவன் காத்திருந்ந்த கணத்தோடு முடிந்ந்து போயிருந்தது ஆர்யா எழுதியிருந்த அவனை பற்றிய குறிப்புகள்.

ஆர்யா எனது நீண்ட நாள் நண்பன். எதேச்சையாக அவனுடைய இந்த குறிப்புகள் அடங்கிய டைரி எனக்கு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலுக்கு செல்லும் பாதையோர பழைய புத்தக கடையில் கிடைத்தது, ஜெயகாந்ந்தன், அசோகமித்ரன், சு.ரா போன்ற நாவல்களை இருக்கா என்று நான் தேடப்போகவில்லை என்றாலும், எனது நண்பருடன் அந்த கூட்டத்தில் கலந்து புத்தகங்களை தேடலானேன். அங்கே ஏற்கனவே புத்தகத்தை தேடிக்கொண்டிருந்த பெண்ணை நான் கவனிக்கவில்லை என்றால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை. புத்தகத்தை தேட என்னை இழுத்ததே அவளின் அந்த வெண்ணிற சல்வார் என்பதே ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மை - திராவிட கட்சிகள் அடிக்கடி இதை உபயோகித்திருக்கிறார்கள், யாரேனும் ஜமுக்காளத்தில் வடிகட்டுவார்களா என்று என் பகுத்தறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை -.

பெண்களுக்கு முன்னால் தானொரு வீரன், அறிவாளி, தானொரு செல்வந்தன் என்று நிருபீக்கும் அல்லது காட்டிக்கொள்ளும் சாதாரண சராசரி மனிதனின் மூளையே எனக்கும் இருந்தபடியால் நானும் பல பல புத்தகங்களை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தேன். எதேச்சையாக சிக்கியது அவனது குறிப்பேடுகள்.

முதல் பக்கத்தில் சூர்யா 12ம் வகுப்பு என்று இருந்ததை சூ வை அடித்து ஆ போட்டிருந்தது, அடைப்பு குறியில் 30ம் நூற்றாண்டு மூளை எனப்பொறிக்கப்படிருந்தது. அவனை கல்லூரி நாட்களில் காலத்தை மீறி கனவு காணும் அவனை எங்களது நண்பர்கள் வைத்த பட்டப்பெயர் 30நூற்றாண்டு முனுசாமி.

நான் ஆவலானேன், இப்பொழுது அவள் என் சிந்தனையில் அவுட் ஆப் போகஸ் ஆகி போனாள், முனுசாமியே என் கண் முன் நின்று தொலைத்தான். சுமார் 10 வருட முந்தைய நட்பு. இப்போ எங்கே, எப்படி, என்ன செய்கிறான் என்பதை அறிய முடியவில்லை. தேடும் அளவிற்கு அவனும் என் ஆத்ம சிநேகிதனும் அல்லன்.

அவனது குறிப்பேடுகளை தொடர்ந்து படிக்க ஆரம்பித்த போது, அவன் ஒரு பைத்தியக்காரன் என்றே எண்ண தோன்றியது. பல விசயங்கள் அவனது குறிப்பேட்டில் அதைத்தான் நிருபித்துக்கொண்டிருந்தது.
ஆனாலும் காத்திருந்த பின் அவனுக்கு என்னவாயிற்று, எதை வாங்க காத்திருந்தான், ஏதேனும் காவலர்களிடம் சிக்கினானா, அல்லது எழுதுவதை நிறுத்திவிட்டானா என தெரிந்த்து கொள்ள ஆவலாகினேன்.

ஒரு வாரம் அவனை பற்றி அறியும் ஆவலில் எனது பழைய நண்பர்களுக்கெல்லாம் தேடி தேடி தொடர்புகொண்டிருந்ந்தேன் என் அலைபேசியில். எதும் மெண்டல் காலேஜ்க்கு ஆள்பிடிக்கிறாயா என்ற கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் அவன் மேல் இருந்த சுவாரஸ்யம் மெது மெதுவாக குறைந்து போனது.

அவனைப்பற்றிய நினைப்பை வேலை மற்றும் சொந்த சுமைகளின் அழுத்தத்தில் மறக்கலானேன்.

சுமார் ஒரு மாதம் அவனைப்பற்றிய முழுதும் மறந்து போயிருந்த சமையத்தில் அவ்னது நண்பன் (எனக்கும் நண்பன் எனலாம்) ஒருவனை கோவை டூ சென்னை ரயிலில் சந்திக்க நேர்ந்தது, அவனிடம் எனக்கு பேச வேறு எதும் கிடைக்காத காரணத்தினால், ஆர்யா பற்றி விசாரிக்கலானேன்.

அவனது தாய்/தந்தையர் மரணத்த பின் அவனை சந்திக்கவே இயலாமல் போனதாக வருத்தப்பட்டு கொண்டிருந்தான். அவன் திருமணம் செய்து கொள்ளவில்லையா என்ற கேள்விக்கு மெல்லிய புன்னகயை வெளிக்காட்டினான். ஒரு கதை இருக்கிறது என்பதை அது காட்டியது. கதை கேட்க விரும்பினேன். ஆர்யாவாக இருந்தால் எப்படி என்று கேட்டிருக்க மாட்டேன். இவனிடம் கேட்டுவிட்டேன்.

நல்ல வேளை சுருக்கமாக முடித்துவிட்டான். ஒரு சாலை விபத்தில் அவனது தாய் தந்தையர் இறந்து போயிருக்கிறார்கள், அவனை தொடர்பு கொள்ள முடியாததால் இறுதி சடங்கை அவனது தம்பியின் உதவியுடன் முடித்திருக்கிறார்கள். அவளது மனைவியும் வந்திருந்தாள் என்றான். எதோ கருத்து வேறுபாட்டில் பிரிந்திருக்கிறார்கள். இவன் அடுத்த நாள் காலையில்தான் வந்து சேர்ந்தான். யாரும் அவனிடம் பேசவில்லை, யாரிடமும் அவன் பேசவில்லை. மருந்துக்கும் அவன் விழியில் கசிவில்லை. நேராக அவனது அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டானாம். எனக்கென்னவோ அழுதிருப்பான் என்றே தோன்றியது.

பத்து நாட்கள் காரியம் முடியும் வரை அவனது தம்பியோடு ஒத்துழைத்தான். பத்தாம் நாள் காரியத்தில் சிவாவும் கூட இருந்திருக்கிறான். திடிரென்று அவனது மனைவி அவன் வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறாள். கன்னம் சிவந்திருந்தது. அறைந்திருக்கிறான். சிவாவிடம் அவர்கள்க்குள்ளே என்ன பிரச்சனை என்று கேட்கையிலே மேலே கை உயர்த்தி காட்டிவிட்டான்.

ஒரு சாரார் அவனது பழைய காதிலியுடன் அவன் நட்பு வைத்திருந்ததை அவன் மனைவி தட்டிக்கேட்டதால் என்றார்களாம், ஒரு சாரார் அவளது மனைவி அவனது பழைய காதலுடன் இருந்தனை அவன் பார்க்க நேர்ந்ததே என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு சிவா யாரையும் பார்க்கவில்லை என்றான், அவனது தம்பி சூர்யா பெங்களூரில் இருப்பதாக கூறினான். ஆனால் எங்கே என்று தெரியாது என்றுவிட்டான்.

ஆர்யாவிற்கு என்ன ஆகியிருக்கும்? அவனைப்பற்றி அறிந்த்து கொள்ளுமளவிற்கு அவன் ஒரு முக்கிய நபராக இல்லை. இருந்தும் ஆவலாகத்தான் இருந்தது. ஆர்யாவிற்கு என்னவாகி இருக்கும்?

----------------------------------------------------------------------

கோவை ரயிலில் சிவாவை சந்தித்து ஒரு மாத காலம் அவனை பற்றி என் சிந்தனையில் இருந்து தற்காலிகமாக அவனை வெளியேற்றியிருந்தேன். அலுவல்கத்தில் ஆடிட்டிங்க் இருந்ததால் அதற்காகவே காலையில் சீக்கிரமாகவும், மாலையில் தாமதமாகும் சென்று வந்து கொண்டிருந்தேன்.

அன்று இரவு எதேச்சையாக மீண்டும் அவனது குறிப்பேட்டை கவனிக்கலானேன். அவன் எனது ப்ழைய நண்பர் அல்லது தெரிந்த ஒருவன் என்பதற்காக அவன் என்ன ஆனான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா அல்லது வேறெதும் காரணமா என்று தெரியவில்லை. எங்களுடன் படித்த கௌரியை அவன் ஒருதலையாக காதலித்து கொண்டிருந்த போது கௌரி என்னிடம் லெட்டர் தந்து கொண்டிருந்தாள்.

அவளை சுத்தமாக பிடிக்காவிட்டாலும், அவள் அவ்வப்போது நான் கேட்காமலே தரும் முத்தங்கள் எனக்கு தேவையாகி இருந்தது, கல்லூரி முடிந்த பின் அவளை எப்படி என்னால் மறக்க முடிந்தது என்றே தெரியவில்லை. அதைவிட ஆச்சர்யம் அவளும் ஒரு முறை கூட என்னை தொலைபேசியில் அழைக்கவில்லை, என் வீட்டு தொலைபேசி எண் அவளிடம் இருந்திருந்தது.

எனக்கு முதல் முறையாக வேலை கிடைத்ததின் பேரில் நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில், சுந்தர் போதையிலே உளறும் போதுதான் ஆர்யா கௌரியின் மேல் ஒருதலைகாதல் கொண்டதாக அறிந்துகொண்டேன். அவளிடம் நான் பெற்ற முதல் முத்தம் கல்லூரியில் மிகப்பிரபலம்.
குருதி புனல் ரிலீஸ் ஆகியிருந்த நேரம் அது. எனக்கு கமல் என்ற பட்டப்பெயர் கிடைத்தது சிறிது காலத்திற்கு. அந்த சமயங்களில் ஆர்யா மொட்டை போட்டிருந்தான், திருப்பதியா? பழனியா என்று நானும் எனது நண்பர்களும் அவனை சீண்டிக்கொண்டிருக்கையில் கோபமாக அழுதுகொண்டு சென்று விட்டிருந்தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்யா எனும் 30நூற்றாண்டு முனுசாமியின் குறிப்பேட்டை கண்டதும் அவனது வாழ்க்கை திசை மாறியதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சியின் பேரிலேயே அவனை தேடி பார்க்க வேண்டும் போல தோன்றியது.

கௌரிக்கு ஏன் அவனை பிடிக்கவில்லை? ஆர்யாவிற்கு ஏன் அவளை பிடித்து போனது?

கௌரி தான் ஒரு பெண் என்பதை நிருபீத்தாலும், தானொரு அழகி என்று நிருபீக்க அவள் செய்த பிரயத்தனங்களில் என்னளவில் தோல்வியுற்றாள் என்றே சொல்லுவேன்.

இப்பொழுது எங்கே இருக்கிறான்? பக்கங்களை புரட்டியதில் திருவல்லிகேணி மேன்சன் ஒன்றின் பேரையும், அந்த மேன்சனில் உள்ள அறை ஒன்றின் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தான், நாளை அலுவலக்த்தில் இருந்து சீக்கிரமாக கிளம்பி செல்ல வேண்டும் என்ற முடிவோடு தூங்கிபோயிருந்தேன். கனவில் கௌரியும், ஆர்யாவும் ஆடிபாடினார்கள். கௌரி கனவில் என்னுடன் கலந்தாள். என்னுடைய உமிழ்நீரை உறிஞ்சிக்கொண்டிருந்தாள், அவன் உமிழ்நீரை எங்கள் மீது உமிழ்ந்து மறைந்து போனான். நான் கௌரியை உதறி சென்று அவனை தொடர்ந்தேன், இருளுடன் இணைந்து விட்டிருந்தான்.

காலையில் இந்த கனவு நினைவிலேயே இருந்தது. கனவா அல்லது நான் அவனை பற்றிய சிந்தனையில் தோன்றிய கற்பனையா என்று குழப்பியது.

அலுவலகத்தில் பல குளறுபடிகள் செய்தேன். அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அரை நாள் விடுப்பில் வெளியேறி விட்டேன்.

விக்ரமுடன் இதைப்பற்றி பேசியதில், இது ஒரு பிரச்சனையே இல்லை, அநாவசியமாக சிந்திப்பதை நிறுத்து என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

நேராக ஆர்யா குறிப்பிட்ட மேன்சனை தேட ஆரம்பித்தேன்.

இந்திரா மேன்சன்.

ஒரு மணி நேரம் மேலாகியும் இந்திரா மேன்சன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எதேச்சையாக கண்ணில் பட்டது சந்திரா மேன்சன். உள்மனது அவன் ஏன் பெயரை மாற்றி எழுதியிருக்க கூடாது என்று.

நான் நினைப்பது சரியென்றால், இந்த மேன்சனில்தான் இருக்கிறான் ஆர்யா. அறை எண் 407.
400 அறைகள் கொண்டதாக அந்த மேன்சன் இல்லை. இருந்தாலும் முதல் தளம் 101லும், 2,3,4வது தளங்கள் முறையே 201,301,401லும் ஆரம்பிப்பதாக இருந்தது,

மொத்தன்ம் நான்கு தளங்கள் கொண்ட அந்த மேசனின் நான்காவது தள்த்தில் அறை எண் 407ல் நின்று கொண்டிருந்தேன். வெளியில் பூட்டப்படாமலே இருந்தது. கதவை தட்டும் முன் ஏனோ பதட்டம் குடிகொண்டுவிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முடிவுக்கு பின் எத்தனை மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என்று அரிந்து கொள்ள பள்ளிக்கு சென்ற போது எனக்கிருந்த படபடப்பு, பதட்டம், கலக்கம் எல்லாம் ரீமேக்காகி கொண்டிருந்தது.

ஷார்ட்ஸ் மற்றும் ஒரு பணியனும் அணிந்து கொண்டிருந்த 20-25 வயதையுடைய ஒரு இளைஞன் வெளிபட்டான்.

கேட்டேன். சொன்னான்.

ஏன் அழுகிறேன்? புரியவில்லை. ஆர்யா இறந்தால் நான் ஏன் அழவேண்டும். என்னை சமாதானம் செய்ய முயல்கிறான். பாவம். என்னால் முடியவில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இங்கே யாரு ட்யூட்டி டாக்டர்?

நாந்தான் சார்.

எப்படி இறந்து போனார்?

ஆர்யா பேசண்ட் நேம். இவருக்கு போதை பழக்கம் அதிகமாகி இருந்திருக்கு சார். ஒரு முறை ஆல்கஹால் எடுத்துகிட்டு இருக்கும் போது, கஞ்சாவையும் பயன் படுத்தியிருக்கிறார், அதுல பாதிப்படைந்து இருக்கிறார். கூடவே மல்டிபிள் டிஸார்டரும் உண்டு. தன்னை சிவா, லாலா, 30ம் நூற்றாண்டு முனுசாமி என்றெல்லாம் பிதற்றுவார், ஆனால் இவரால் எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்தது. கதை எழுதுகிறேன் என்று இந்த டைரியில் எதாச்சும் கிறுக்கி கொண்டிருப்பார்.

நேற்று ஆர்யாவை நான் கொன்னுட்டேன் நான் கொன்னுட்டேன் என்று புலம்பிக்கொண்டிருந்தார்.


முற்றும்


Viewing all articles
Browse latest Browse all 28

Latest Images

Trending Articles


கூரைகத்தாழை மீன்கள் அதிகளவில் சிக்கின காரைக்காலில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு...


Operation Red Sea (2018) Tamil Dubbed Movie HD 720p Watch Online


மாமங்கலையின் மலை-2


உள்ளும் புறமும், அந்தரங்கமும் அரசியலும், பிணங்கும் பயணம்- ஸ்வர்ணா ராஜகோபாலன்


திருமாவளவனுக்கு ஷாக் தந்த தேர்தல் ஆணையம்... விசிகவுக்கு பானை சின்னம் கிடையாது...


எக்ஸ்- வீடியோஸ் பட டிரெய்லரை வெளியிடும் நடிகை கஸ்தூரி


நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் வியாழக்கிழமை விரதம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


1 - தைமூர் (பகுதி 1 /2 ) - வந்தார்கள் வென்றார்கள்


விநாயகத் தத்துவம்! ஆன்மீகத் தகவல்கள்!


உங்கள் எண் என்ன? - நாவல் விமர்சனம் - இல்லோடு சிவா


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


எடப்பாடி அருகே போதையில் அரை நிர்வாண ஆட்டம்: தம்பதிக்கு தர்மஅடி


Dhanush, Manju warrier வாழ்ந்து அசத்திய திருநெல்வேலி காடு எங்க இருக்கு தெரியுமா?


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


Geostorm (2017) Tamil Dubbed Movie HDRip 720p Watch Online (HQ Audio)


மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்


மலர் காவடி 600 முதல் 1,500 ஆடிக்கிருத்திகை காவடி விற்பனை களைகட்டியது


ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதியம் இழப்பு பொருளாதார ஊக்குவிப்பு...


உபன்ட்டு!